இந்தியாவில் போக்குவரத்துக்கு ஆண்டுக்கு 2௦௦ கோடி லிட்டர் டீசல்,பெட்ரோல் தேவைப்படுதாம் இது கொஞ்சம் அதிகப்படிதான்.ஒரு வீட்டுக்கு நாலு இரு சக்கர வாகனங்கள் ரெண்டு நாலு சக்கர வாகனங்கள் என்று பைக்கும் காரும் இல்லாத வீடே கிடையாது.அடுக்கு மாடி குடியிருப்புகளில் அது அமைந்திருக்கும் இடத்தைப் போல இருமடங்கு நிலம் வாகனங்களை நிறுத்த தேவைப்படுகிறது.

ஏராளமான வாகனங்கள் தெருக்களிலேயே நிறுத்தப்படுகின்றன.சென்னையில் டிராஃபிக்ஜாம் நிமிஷக்கணக்கு என்பதெல்லாம் பழங்கதை. இப்போது மணிக் கணக்காகிறது. இனி நாள் கணக்கில் ஆகலாம். கார் வைத்திருப்பவர்கள் நடுரோட்டில் வாகனங்களுக்குள் தூங்கப்போகும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

 

karadikulam

 

இதே ரீதியில் போனால் அண்ணா சாலையிலோ பூந்தமல்லி ஹைரோட்டிலோ நடு ரோட்டில் காரை பார்க் பண்ணிவிட்டு வீட்டுக்கு வந்து மறுநாள் போய் காரை எடுத்துக்கொண்டு வரவேண்டிய நிலை ஏற்படலாம்.
சீனாவில் சைக்கிளை பயன்படுத்துவது போல் இந்தியாவிலும் பயன்படுத்தினால் எரி பொருள் மிச்சமாகும் சுற்றுச்சூழல் மாசு குறையும் போக்குவரத்து இடைஞ்சல் குறிப்பாக டிராஃபிக் ஜாமே இருக்காது, உடற்பயிற்சியால் மக்களின் ஆரோக்கியம் மேம்படும். மனித நேரம் – பயண நேரம் மிச்சமாகும். வாகனங்கள் தேய்மானம் சாலைகள் சேதம் குறையும். விபத்துகளே இருக்காது இது குறித்த விழிப்புணர்வு இந்தியாவில் இன்னும் வரவில்லை என்றுதான் சொல்லணும்.பெட்ரோலும் டீசலும் விக்கிற விலைக்கு தட்டுப்பாடு வரும் முன்பு இப்போதே ரேஷன் முறை கொண்டு வருவது நல்லது.
கார் பைக் உற்பத்தியை குறைத்து வாகன விலைகளை உயர்த்தலாம்.பெட்ரோலையும் மின்சாரத்தையும் தண்ணியாக செலவு செய்கிறோம் அப்புறம் குடங்களை தூக்கிக்கொண்டு குடி நீருக்கு அலைவது போல ரேஷன் கடைகளில் மண்ணெண்ணையோடு பெட்ரோலுக்கும் டீசலுக்கும் ரேஷன் கார்டை தூக்கிக்கொண்டு அலையும்போதுதான் கஷ்டம் புரியும்