கண்களால் காண ஒரு கோடி டாலரை வங்கியில் இருந்து எடுத்த ஆப்ரிக்க செல்வந்தர்

Must read

பிஜான்,  நைஜிரியா

ப்ரிக்காவின் மிக பெரிய செல்வந்தர் அலிகோ டன்கோட் தாம் கண்ணால் பார்ப்பதற்காக வங்கியில் இருந்து 1 கோடி டாலரை எடுத்துள்ளார்.

நைஜிரியாவை சேர்ந்த செல்வந்தர் அலிகோ டன்கோட் ஆப்ரிக்க கண்டத்தின் மிகப் பெரிய செல்வந்தர் ஆவார்.   இவர்  ஐவரி கோஸ்ட் பகுதியை சேர்ந்தவர் ஆவார்.   தற்போது அபிஜான் நகரில் வசித்து வரும் இவர் மிகவும் வெற்றி பெற்ற ஒரு தொழிலதிபர் ஆவார்.   ஆரம்பத்தில் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த இவர் தற்போது ஆப்ரிக்காவின் மிகப் பெரிய செல்வந்தராக உள்ளார்.

இவர் சமீபத்தில் ஒர் இளம் தொழிலதிபர்கள் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.   தனது உரையில், “தற்போதுள்ள நிலையில் ஆப்ரிக்காவின் எதிர்காலம் விவசாயத்திலும் புதிய தொழில் நுட்பத்திலும் மட்டுமே அடங்கி உள்ளது.   அதன் மூலம் இளம் தொழிலதிபர்கள் நல்ல வெற்றியை காண முடியும்.  அதே நேரத்தில் அவர்கள் தனது முதல் வெற்றியுடன் திருப்தி அடைந்து விடக் கூடாது.

நான் எனது முதல் கோடி டாலரை அடைய பெரும் பாடு பட்டேன்.   எனது வங்கியில் இருந்து ஒரு கோடி டாலரை ரொக்கமாக எடுத்து எனது காரிலும் படுக்கை அறையிலும் வைத்து கண்ணார பார்த்தேன்.   இவை அனைத்தும் என்னுடையது என பெருமை அடைந்தேன்.   அடுத்த நாள் அந்த ரொக்கத்தை மீண்டும் வங்கியில் செலுத்தி விட்டேன்” என அலிகோ டன்கோட் தெரிவித்தார்.

More articles

Latest article