சென்னை:
ள்ளாட்சித் தேர்தலிலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 8 இடங்களில்தான் அக்கட்சியால் வெற்றி பெற்றது. இதற்கிடையே உள்ளாட்சி தேர்தலிலும் காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி தொடருமா என்ற கேள்வி எழுந்தது.
11-1452498700-evks-elangovan-v-600
இந்த நிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவன், உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், “தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் டெல்லி பயணத்தால் தமிழகத்துக்கு எந்த பயனும் ஏற்படப்போவது இல்லை. டெல்லி செல்லும் முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடியிடம் தம்மீதான வழக்குகள், தேர்தலின் போது பிடிபட்ட ரூ570 கோடி விவகாரம் குறித்துதான் பேசப் போகிறார்” என்றும்  இளங்கோவன் தெரிவித்தார்.