இரண்டாம் உலகப் போரில் போரிட்ட 93 வயது இளைஞரின் காதல் மீண்டும் மலர்ந்தது

Must read

veteran---mos_012116051216
அமேரிகா
இந்த கணிபொறியுகத்தில், இணைய சக்தி மிக மகத்தானது. அதனைக் கொண்டு, 93 வயதுடை இளைஞர் ஒருவர் தன் 70 ஆண்டு காதலியை தேடியும் கண்டும் பிடித்திருக்கிறார்.
நோர்வூட் தாமஸ் என்ற அந்த விமான படையின் முன்னாள் போர் வீரர், ஒரு  பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்த பொழுது தன் காதல் கதையை உருக்கமாக கூறியுள்ளார். இதை படித்த முன்னூறுக்கும் மேற்பட்டோர் அவருடைய காதலியை தேடவும் காதல் மீண்டும் மலரவும் பண உதவி செய்தனர். இணையத்தின் உதவியால் அவர் காதலியை மீண்டும் கண்டுபிடித்தார்.
அடுத்த மாதம் தன் காதலியான 88 வயதுடைய ஜோய்ஸ் மொறிஸய் சந்திக்க ஆஸ்திரேலியா செல்கிறார். இந்த காதல் கதையை கேட்ட ஏர் நியூசிலாந்து, நோர்வூடையும் அவர் மகனையும் இலவசமாக கூட்டிச் செல்கிறது.
நெஞ்சம் மறப்பதில்லை – உண்மைதானே?
-ஆதித்யா

More articles

Latest article