அறிவியல் சூப்பர் ஸ்டார் ஸ்டீபன் ஹாக்கிங் மனித இனம் அழிவை நோக்கி செல்கிறது என்கிறார்; அது மட்டுமல்லாமல் அதற்கு காரணமும் நாமே என்கிறார்.
இயற்பியலாளர் ஆண்டு பிபிசி ரீத் பேருரையின் போது கீழ்க்கண்ட கருத்துக்களை  பகிர்ந்து கொண்டார் , ” ஆயிரம் அல்லது பத்தாயிரம் ஆண்டுகளுக்குள் ஒரு பேரழிவு கிரகத்தில் தவிர்க்க முடியாத ஒன்று” என்பதை கூறினார். அத்தகைய நிகழ்வு நடபதற்குள் நாம் விண்வெளிக்கு மற்றும் பிற நட்சத்திரங்களுக்கு குடிபெயர்ந்திருப்போம் , அதனால் பூமிக்கு வரும் பேரழிவு மனித இனத்தை முற்றிலுமாக அழிக்க வாய்ப்பு இல்லை.
காலநிலை மாற்றம், அணு ஆயுத போர் மற்றும் மரபணு வைரஸ்கள் வாழ்க்கை வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்தார். தொழில்நுட்ப மேம்பாடுகள் வர வர, ” புதிய வழிகளில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது ,” என்று ஹாக்கிங் கூறினார்.
பேரழிவு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், ஹாக்கிங் மக்கள் ஒருங்கிணைத்து அதை தவிர்க்கவும் முயற்சி மேற்கொள்வார்கள், என்கிறார்.
— subbiah