இன்று: ஜனவரி 19

Must read

சீர்காழி கோவிந்தராஜன்
சீர்காழி கோவிந்தராஜன்

சீர்காழி கோவிந்தராஜன் பிறந்தநாள்
சி. கோவிந்தராஜன் என்ற இவர் 1933ம் ஆண்டு ஜனவரி 19ம் தேதி பிறந்த இவர், 1988ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி இறந்தார். இவரது தந்தை சிவசிதம்பரம். தாய் அவையாம்பாள். பிறந்த ஊர் சீர்காழி. இவர் தனது ஆரம்பக் கல்வியை சீர்காழி வாணிவிலாஸ் பாடசாலையில் பயின்றார். இளமைப் பருவத்தில் விரும்பிப் பாடியவற்ற பாடல்களில் சிலவற்றை பார்ப்போம்….
* தியானமே எனது – தியாகராஜ பாகவதர் பாடிய பாடல்
* வதனமே சந்திர பிம்பமோ – தியாகராஜ பாகவதர் பாடிய பாடல்
* செந்தாமரை முகமே – பி. யூ. சின்னப்பா பாடிய பாடல்
* கோடையிலே இளைப்பாறி- எல். ஜி. கிட்டப்பா பாடிய பாடல்
இளம் வயதில் இவர் தேவி நாடக சபா, பாய்ஸ் கம்பெனி ஆகிய நிறுவனங்களில் நடிகராக பணியாற்றினார். சென்னை இசைக்கல்லூரியில் இசை பயின்றார். இசை வாழ்வின் ஆரம்பத்தில் இசைமணி, சங்கீத வித்வான் ஆகிய  பட்டங்களை பெற்றார். லதாங்கி, கல்யாணி, சங்கராபரணம் ஆகியவை இவருக்கு பிடித்த ராகங்கள்.
*1953 இல் பொன்வயல் என்ற படத்துக்காக ‘‘சிரிப்புத் தான் வருகுதைய்யா’’ எனத் தொடங்கும் பாடல், தான் இவர் முதன் முதலாக சினிமாவுக்காக பாடிய பாடல். ஆனால் அந்த பாடலுக்கு முன்பே ஜெமினி தயாரித்த அவ்வையார் திரைப்படத்திற்காக ஆத்திச்சூடியை பாடினார். அந்த சினிமாவில் சீர்காழி கோவிந்தராஜனின் பெயர் வெளியிடவில்லை.
ஜேம்ஸ் வாட்
ஜேம்ஸ் வாட்

ஜேம்ஸ் வாட் பிறந்தநாள்
ஸ்காட்டியப் புத்தாக்குனரும், இயந்திரப் பொறியாளருமான ஜேம்ஸ் வாட் 1736ம் ஆண்டு இதே நாளில் ஐந்தாம் கிளைடில் உள்ள கிரீனாக் என்னும் துறைமுகப் பகுதியில் பிறந்தார் பிறந்தார்.  நீராவி இயந்திரத்துக்கு இவர் செய்த மேம்பாடுகளே பிரித்தானியாவிலும், உலகின் பிற பாகங்களிலும் ஏற்பட்ட தொழில் புரட்சிக்கு அடிப்படையாக அமைந்தது.
இவரது தந்தை கப்பல் கட்டுனர் மட்டுமல்ல, கப்பல் உரிமையாளரும், ஒப்பந்ததாரராகவும் இருந்தார். தாய் அக்னஸ் முயிர்ஹெட் நன்றாகப் படித்த பெண்மணி.
வாட் பள்ளிக்கு சரியாக போகவில்லை. ஆனால், பெரும்பாலும் வீட்டிலேயே தாயிடம் பல விஷயங்களை கற்றார். கணிதம் கற்பதில் ஆர்வமாக இருந்தார்.  இவரது 18 வயதில் தாயார் இறந்தார்.  இவரது தந்தையின் உடல்நிலையும் பாதித்தது. கருவிகள் செய்வது பற்றிக் கற்றுக் கொள்ள லண்டன் சென்றார் வாட். ஒரு ஆண்டு கழித்து, பின்னர் மீண்டும் ஸ்காட்லாந்துக்கு வந்தார். அங்கே அவர் சொந்தமாக கருவிகள் செய்யும் தொழில் தொடங்கினார். 1819ம் ஆண்டு ஆகஸ்ட் இவர் இறந்தார்.
ஓஷோ
ஓஷோ

ஓஷோ நினைவு நாள்
ஓஷோ 1931ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி  மத்திய பிரதேசத்தில் உள்ள குச்வாடா என்ற சிறிய ஊரில் பிறந்தார். குச்வாடா ஓஷோவுடைய தாய் வழி தாத்தா மற்றும்  பாட்டி ஆகியோர் வாழ்ந்து வந்தது இந்த ஊரில் தான். பிறந்தது முதல் 7 ஆண்டுகள் அந்த ஊரில் தான் வளர்ந்தார். ஓஷோவின் பெற்றோர் கடர்வாடாவில் வசித்து வந்தனர்.  தாத்தா மறைவுக்கு பின் பாட்டியுடன் கடர்வாடாவுக்கு வந்து சேர்ந்தார்.
ஓஷோவுடைய இயர் பெயர் ரஜ்னீஷ் சந்திர மோகன். சிறு வயதிலிருந்தே தியானத்தில் நாட்டம் கொண்ட ஓஷோ தன்னுடைய 21வது வயதில்,  அதாவது 1953ம் ஆண்டு  மார்ச் 21ம் தேதியில் ஞானம் அடைந்தார். கிழக்கில் ஞானமடைதல் என்பது முழுமையான தன்னுணர்வு அல்லது விழிப்புணர்வு நிலை என்பதாகும். கவுதமபுத்தர், கபீர், ரமணர் மற்றும் பலர் இப்படி ஞானம் அடைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
1956ம் ஆண்டு ஓஷோ தத்துவ இயலில் முதல் வகுப்பு சிறப்பு நிலை தேர்ச்சி பெற்றார். சாகர் பல்கலைகழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார்ர். பட்டப் படிப்பில் அகில இந்திய அளவில் தங்கப்பதக்கம் பெற்றவர்.
1957ம் ஆண்டில் ரெய்ப்பூர் சமஸ்கிருத கல்லூரியில் ஓஷோ பேராசிரியராக சேர்ந்தார். 1958ம் ஆண்டில் ஜபல்பூர் பல்கலைக்கழகத்தில் தத்துவ பேராசிரியராக சேர்ந்தார்.
ஓஷோ 1966 வரை அங்கேயே கல்வி கற்பிக்கிறார்.
1966 ல் ஒன்பது வருட பேராசிரியர் வேலையை விடுத்து, மனித குலத்தின் விழிப்புணர்வை உயர்த்துவதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்கிறார். 1970 ஏப்ரல் மாதம் 14ந் தேதி அவர் தனது ஒப்புயர்வற்ற தியான பயிற்சியான டைனமிக் தியானத்தை அறிமுகம் செய்தவர் ஓஷோ.

More articles

Latest article