இந்திய சமையலைக்கு ஏற்ப உங்களை எப்படி தயார்படுத்திக் கொண்டீர்கள்?
15 வயதில் எனது குடுபத்தாருடன் இரு முறை இந்தியா வந்து ஒரு மாதம் சென்னை திருவான்மியூரில் தங்கியிரு ந்தேன். சென்னையை பற்றி எனது தந்தை கொஞ்சம் அறிந்து வைத்திருந்தார். இங்குள்ள சிறிய ஹோட்டல்களில் சாப்பிடுவோம். உணவு ரொம்ப காரமாக இருக்கும். அதனால் அழுவேன். கண்டிப்பாக இங்கே இருக்க மாட்டேன் என்று கூறினேன். இந்த நாட்டில் என்னால் வாழ்வது சாத்தியமல்ல என்று அழுதேன். அதன் பிறகு இசைக்காக வ ந்தபோது காரமில்லாத உணவுகள் கிடைக்கும் இடங்களை தெரிந்து கொண்டேன். சாப்பாடு, இட்லி, சோசை பிடி க்கும், எனது சொந்த அபார்ட்மென்டில் குடியிருக்கிறேன். அதனால் எது வேண்டுமானாலும் நான் சமைத்து கோள்வேன். 15 மாதங்கள் இங்கு இருந்துவிட்டேன். நன்றாக இருக்கிறேன். அடுத்த சில மாதங்களில் நான் பிரான்ஸ் செல்கிறேன். வீட்டில் சமைக்கப்படும் தென் தமிழக உணவு வகைகள் மற்றும் இனிப்பு வகைகள் எனக்கு பிடித்திரு ந்தது.