1

டிகர் பிரேம்ஜியின் பர்த் டே பார்ட்டியில் மதுவில் மயங்கிய விஜய்” என்று குறிப்பிட்டு வாட்ஸ் அப்பில் பரவிய படங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. எப்போதோ எடுத்த படங்கள் அவை என்றும் சொல்லப்ப்டடது.

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்து ஹிட் அடித்ததன அந்த படங்கள்.

இப்போது லேட்டஸ்ட்டாக எடுத்த “போதை படம்” ஒன்று செம ஹிட் ஆகி, வாட்ஸ் அப்களில் உலவுகிறது.

இது, ஜெயம்ரவியின் போதை காட்சிகள் என்ற தலைப்பில் உலாவருகிறது.

தான் நடித்த “தனி ஒருவன்” வெற்றி பெற்றதை அடுத்து லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் படத்தில் நடித்தவர்களுக்கு காக்டெயில் பார்ட்டி கொடுத்திருக்கிறார் ஜெயம்ரவி.

போதை கிறு கிறுவென்று ஏற.. கை சும்மா இருக்காமல் பரபரவென தங்கள் செல்போனில் படம் எடுத்துத் தள்ளியிருக்கிறார்கள் பலரும்!

இப்போது அந்த படங்கள் வாட்ஸ்அப்பில் மட்டுமின்றி ட்விட்டரையும் கலக்குகிறது.

பார்ட்டின்னா கலக்கத்தானே செய்யும்!