1

ந்திராவில் செங்கல் சூளையில் கொத்தடிமையாக பணியாற்றிபோது அடித்து கொல்லப்பட்ட தமிழரின் சடலத்துடன் திருத்தணி அருகே கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சிவ்வாடா பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் உள்ளிட்ட 11 பேர், ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் உள்ள தனியார் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்தனர்.

அங்கு ஏற்பட்ட தகராறில் ராஜேந்திரன் கடுமையாக தாக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் ராஜேந்தின் உயிரிழந்தார்.  அவரது சடலம், சொந்த ஊரான சிவ்வாடாவுக்கு கொண்டுவரப்பட்டது.

ராஜேந்திரன் மரணத்திற்கு நீதிகேட்டு அவரது குடும்பத்தினரும் பொதுமக்களும் சிவ்வாடா கிராமத்தில் சடலத்துடன்  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.