அமைச்சரவையில் இருந்து பி.வி. ரமணா நீக்கம்: கட்சி பதவியும் காலி

Must read

download
சென்னை:
மிழக அமைச்சரவையில் இருந்து பால் வளத்துறை அமைச்சர் பி.வி. ரணமா நீக்கப்பட்டுள்ளார்.  முதல்வர்  ஜெயலலிதாவின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் கே.ரோசய்யா, பி.வி.ரமணாவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ப.மோகன் பால் வளத்துறையை கூடுதலாக கவனிப்பார் என்றும் ஆளுநர் ரோசய்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் , திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்தும் பி.வி. ரமணா நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா  விடுத்துள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் கூடுதலாக திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தையும் கவனிப்பார் என்று  கூறியுள்ளார்.
அமைச்சரவையிலிருந்து பி.வி. ரமணா நீக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
சமீபத்தில் ரமணா ஒரு பெண்மணியுடன் நெருக்கமாக இருப்பது இருப்பது போன்ற புகைப்படம் வாட்ஸ் ஆப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article