obama
அதிபர் ஒபாமா

வாஷிங்டன்:
ஆண்டுதோறும் அமெரிக்காவின் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் அதிபர்கள் உரையாற்றுவது வழக்கம். இந்த வகையில் அதிபர் ஒபாமா கடைசியாக உரையாற்றிய பேச்சு விபரம்:
‘‘நாட்டின் பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்து மக்கள் அச்சமடைய தேவையில்லை. எனது சாதனைகளை துரோகம் என குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் கடுமையான குரலில் பிரச்சாரம் செய்து எனது இடத்தை பிடிக்க பார்க்கிறார்.
அரசியலில் பழங்குடியின மக்கள் ஏமாற்றமடைந்துவிட்டதாக, பின்னடைவு ஏற்பட்டுவிட்டதாகவும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. எங்களை போல் இல்லாத, எங்களை போல் சாமி கும்பிடாத என சக குடிமக்களை பிலிகடா ஆக்க பார்க்கிறார்கள். ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுக்களை டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார். பொருளாதாரம், பாதுகாப்பு விஷயங்களில் தற்போது செல்லும் வழித்தடத்தில் இருந்து விலகிச் செல்லப்போவதில்லை. இதில் சிலர் கூறும் எதிர்மறையான கருத்துக்களால் தான் உலகளவில் அமெரிக்காவுக்கு இழிவை ஏற்படுத்துகிறது.
மிப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நேரத்தில் நாம் வாழ்கிறோம். நாம் வாழும் வழித்தடம், பணியாற்றும் பாதை, இந்த பூமி, உலகத்தில் உள்ள நமது இடம் ஆகியவற்றை மாற்றி வடிவமைக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
வாய்ப்புக்களை நீட்டிக்கவும், சமத்துவமின்மையை விரிவடைவதிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். நாம் விரும்புகிறோமோ? இல்லையோ?  இந்த மாற்றத்தின் வேகம் துரிதப்படுத்தப்படும்.
நான் மக்களை நம்புகிறேன். அதனாலேயே இங்கே நிற்கிறேன். அரசியல் கட்சிகளின் வெறுப்பு மற்றும் சந்தேகம் எனது பதவி காலத்தில் என்னை வருத்தமடையசெய்தது. பிரிவினை வாதத்தை முன்னாள் அதிபர்கள் லிங்கன், ரூசெவலெட் ஆகியோர் சீர்செய்தது போல், நானும் இந்த பதவியில் இருக்கும் வரை அதற்கான முயற்சி செய்வேன். இந்த நாடு தெளிவான கண்களுடனும், வலுவான மற்றும் பெரிய இதயத்துடன் உள்ளது. ஆனால், மாற்றத்தை கண்டு கலக்கத்தின் பிடியில் இந்த நாடு சிக்கி தவிக்கிறது.
போர், மன அழுத்தம், புலம் பெயர்ந்து குடியேறுதல், தொழிலாளர் போராட்டம், சிவில் உரிமை விரிவாக்க இயக்கம் ஆகியவற்றுக்கு முன்னால் அமெரிக்காவில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. ஒவ்வொரு முறையும் எதிர்காலம் குறித்த அச்சம் ஏற்படுவதுண்டு. அதற்காக மாற்றத்தை நாம் தடுத்து நிறுத்தினால் இதற்கு யார் பொறுப்பேற்பது. முந்தைய வரலாறுகள் தொடர்ந்து நிலை நிறுத்த உறுதியளிக்கப்படும்.
அமெரிக்காவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையில் அச்சுறுத்துத்தல் ஏற்பட்டள்ளது. இது போன்ற பல அச்சுறுத்தல்களை நாம் ஒவ்வொரு முறையும் கடந்து வந்துள்ளோம். வெடிகுண்டு மூலம் தீர்வு ஏற்படுத்த முயற்சி செய்வோரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கப்படும். மதத்தை இலக்காக கொண்டு செயல்படக் கூடாது. இது போன்ற அரசியலை மக்கள் நிராகரிக்க வேண்டும். சகிப்புத்தன்மை தான் நாட்டின் பாரம்பரியம். இதை அரசியாலால் மாற்ற வேண்டிய விஷயமல்ல. இது நாட்டை பலப்படுத்தும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உலகின் பாதுகாப்பே அமெரிக்காவின் இலக்கு. அதற்காக உலகத்தின் போலீஸ்காரராக அமெரிக்கா மாற வேண்டும் என்பது கிடையாது.
நெருக்கடியில் சிக்கும் ஒவ்வொரு நாட்டையும் நாம் மறு சீரமைப்பு செய்ய முயற்சிக்க கூடாது. இது தலைமை பண்புக்கு அழகு கிடையாது. இது புதை மணலில் சிக்கிக் கொள்ளும் செயல். இதற்காக அமெரிக்கர்களின் ரத்தத்தை சிந்துவது நம்மை பலவீனப்படுத்தும். வியட்நாம், ஈராக்கில் ஏற்கனவே நாம் பாடம் கற்றுக் கொண்டுள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.