நீதிபதி அளித்த நோட்டீஸ்
நீதிபதி அளித்த நோட்டீஸ்

த்திய மங்கலத்தில், சார்பு நீதிமன்றத்தில்  அலுவலக உதவியாளராக பணிபுரிபவர் வசந்தி.இவருக்கு கடந்த   இரண்டு நாட்களுக்கு முன், சார்பு நீதிபதியிடம் இருந்து ஒரு  நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதில் “சார்பு நீதிபதி வீட்டில் துவைப்பதற்கு போடப்படும் துணிகளை சரிவர துவைக்காமல் இருப்பதாகவும், குறிப்பாக உள்ளாடைகளை அருவருப்படைந்து தூக்கி வீசி விடுவதாகவும், இது குறித்து நீதிபதியும் அவரது மனைவியும் கேள்வி கேட்டால் எதிர்த்து பேசுவதாகவும்” குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.
அது மட்டுமல்லாமல், இப்படி குற்றம் இழைத்திருப்பதற்காக , வசந்தி மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கூடாது”  என்று அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நோட்டீசையும், சத்தியமங்கலம் சார்பு நீதிபதியே , கையெழுத்திட்டு, பெறுநர் முகவரியுடன் அனுப்பி இருக்கிறார்.
 
வசந்தி அளித்த பதில்
வசந்தி அளித்த பதில்

நோட்டீசை பெற்றுக்கொண்டதாக வசந்தியும் பதில் கையெழுத்திட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த நோட்டீஸிற்கு பதில் அளித்துள்ள வசந்தி, “தான் இனிமேல் இப்படிப்பட்ட புகார்கள் வராத அளவிற்கு ஒழுங்காக பணியாற்றுவேன்” என்று பதில் அளித்திருக்கிறார்.
நீதிபதி அளித்த நோட்டீஸும் அதற்கு வசந்தி அளித்த பதிலும் தற்போது சமூக வலைதளங்களல் வைரலாக பரவி வருகிறது.
“நீதித்துறையில் நடக்கும் அதிகார துஷ்பிரயோகங்கள் பல. அவற்றுக்கான ஒரு எடுத்துக்காட்டுத்தான் இது” என்று சமூக ஆர்வலர்கள் ஆதங்கப்படுகிறார்கள்.