அஞ்சலட்டை மாத இதழ்!

Must read

12552892_939515259435140_8924073608070650478_n
ரு காலத்தில் கையெழுத்து பத்திரிகை என்பது பிரபலமாக இருந்தது.  சில பக்கங்களில் கைகளால் கதை, கவிதைகள் எழுதப்பட்டு பிரதி எடுத்து பலருக்கும் தருவார்கள். அதன் பிறகு, செல்போன் வந்த போது, “எஸ்.எம்.எஸ். இதழ்” என்பது பரவியிது. தினமும் சில கவிதைகள் அல்லது செய்திகளை பலருக்கும் அனுப்புவார்கள்.
இது டிஜிடல் யுகம். இணைய இதழ்கள் பல வெளியாகின்றன. தவிர, வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்களில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், “அஞ்சலட்டை இதழ்” ஒன்று வெளியாவது ஆச்சரியம்தானே!
ஆமாம்..  “பாரதி” என்ற அஞ்சலட்டை இதழை திருச்சியைச் சேர்ந்த தாமோதரன் கண்ணன் நடத்தி வருகிறார். முழுக்க முழுக்க ஹைகூ கவிதைகளுக்கான இதழ். அஞ்சலட்டையின் முன்பக்கம் இருபது ஹைகூ கவிதைகள் வெளியாகியிருக்கிறது.

தாமோதரன் கண்ணன்
தாமோதரன் கண்ணன்

இந்த இதழை நடத்தும் தாமோதரன் கண்ணன், அரசங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை தமிழாசிரியராக பணியாற்றுகிறார். குறும்படங்களும் இயக்கி இருக்கிறார்.
தாமரை கண்ணனிடம் பேசினோம். அவர், “பாரதியார் சுதேசமித்திரன் உதவி ஆசிரியராக இருந்தபோது 1916ல்  முதன் முதல் முதலில் ஹைகூ கவிதகள் பற்றி எழுதினார். சில ஹைகூ கவிதைகளை மொழி பெயர்த்தும் அளித்தார். அப்படி ஹைகூ கவிதைகள் தமிழகத்துக்கு அறிமுகமான நூற்றாணடு இது.
அதன் நினைவாக. கடந்த மாதம் இந்த அஞ்சலட்டை இதழை வெளியிட்டேன்.  நூற்றைம்பது பிரதிகள் உருவாக்கி, தமிழகம் முழுதும் இருக்கும் கவிஞர்களுக்கு அனுப்பினேன்.  இனி இது இன்லட்ண்ட்  லெட்ரில், கூடுதல் கவிதைகளுடன் வெளியாகும்”  என்கிறா  உற்சாகமாக.
வித்தியாசமான முயற்சி!

More articles

Latest article