சென்னை
சென்னையில் மண்டல வாரியாக நோயாளிகள் எண்ணிக்கை இரட்டிப்பாகும் நாட்கள் குறித்த விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.
முதல் இடத்தில் சென்னை உள்ளது.
சென்னையில் சராசரியாக நோயாளிகளின் எண்ணிக்கை 25.4 நாட்களில் இரட்டிப்பாகிறது.
இதில் அடையாறு, அம்பத்தூர், சோழிங்கநல்லூர்,வளசரவாக்கம் மற்றும் ஆலந்தூர் ஆகிய மண்டலங்களில் இரட்டிப்பாகும் நாட்கள் சராசரியை விடக் குறைவாக உள்ளன.
அதாவது ஆலந்தூர் மண்டலத்தில் 20.7 நாட்களிலும், வளசரவாக்கத்தில் 22.2 நாட்களிலும், சோழிங்கநல்லூரில் 22.4 நாட்களிலும், அம்பத்தூரில் 23.2 நாட்களிலும், அடையாற்றில் 24 நாட்களிலும் நோயாளிகள் எண்ணிக்கை இரட்டிப்பாகின்றன.
அதே வேளையில் மாதவரம் மண்டலத்தில் 31.7 நாட்களிலும், பெருங்குடியில் 29.8 நாட்களிலும், கோடம்பாக்கத்தில் 28.8 நாட்களிலும், அண்ணா நகரில் 27.4 நாட்களிலும், மணலியில் 27.3 நாட்களிலும் திருவொற்றியூரில் 26.8 நாட்களிலும் நோயாளிகள் எண்ணிக்கை இரட்டிப்பாகின்றன.