அதிபர் முகாபே மனைவியுடன்

ஜிம்பாப்வே நாட்டில் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றி உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதையடுத்து தற்போதைய அதிபர் ராபர் முகபே கைது செய்யப்பட்டடுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இதற்கு அதிபர் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது.

ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேயில் ராபர்ட் முகபே அதிபராக பதவி வகித்து வருகிறார். அவருக்கும், துணை அதிபருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.  இதைத்தொடர்ந்து, துணை அதிபர் எம்மர்சன் நாங்காவாவை கடந்த வாரம் முகபே பதவி நீக்கம் செய்தார்.

ஆட்சியை கைப்பற்றிய  ராணுவ தளபதி சிவெங்கா

இதன் காரணமாக ஆளும்கட்சியில் பிளவு ஏற்பட்டது. இதன் காரணமாக ராணுவ தளபதி ஜெனரல் சிவெங்கா துணைஅதிபருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,  இன்று அதிகாலை, ஜிம்பாப்வே தலைநகர் ஹரரேவை ராணுவத்தினர் பீரங்கி வண்டிகளுடன் சுற்றி வளைத்து தாக்குதலில் ஈடுபட்டனர்.

அதைத்தொடர்து,. அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட ராணுவம், அதிபரை முபேவை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அதிபரின் நிலை என்னவானது, பத்திரமாக உள்ளரா அல்லது கொல்லப்பட்டாரா என்ற தகவல்கள் வெளிவரவில்லை.

இதன் காரணமாக ஜிம்பாப்வேயில் குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது.

ஆனால், அதிபர் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.