வாஷிங்டன்: உலக நாடுகளுக்கு தேவையான தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சீரம் நிறுவனம், இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என்றுள்ளார் உலக வங்கி தலைவர் டேவிட் மல்பாஸ்.

கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள சீரம் நிறுவனம் குறித்து அவர் கூறியுள்ளதாவது, “இந்தியாவில், தடுப்பூசி போடும் பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்; இது உலகின் அனைத்து நாடுகளும் உடனடியாக செய்ய வேண்டிய நடவடிக்கை. எனவே, வளர்ந்துவரும் நாடுகள் மட்டுமின்றி, ஏழை நாடுகளுக்கும் தடுப்பூசிகளை விரைவாக வழங்குவது அவசியம்.

இந்தாண்டு மத்தியில், உலக வங்கியுடன், 50 நாடுகளுக்கான நிதி ஒப்பந்தங்களுக்கு அனுமதி வழங்கப்படும். இந்த நிதியின் வாயிலாக, அந்த நாடுகள், தங்களுக்கு தேவையான தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியும்.

இந்தியாவில் தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சீரம் இந்தியா நிறுவனத்துடன், எனக்கு நெருங்கிய தொடர்புண்டு. உலக நாடுகளுக்கு தேவையான தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சீரம் நிறுவனம், அங்கு அமைந்திருப்பது, அந்நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன்” என்றுள்ளார் டேவிட் மல்பாஸ்.