அதிமுகவின் ஜீரோக்கள்
ஜெ… எப்படிப் பட்டவராக இருந்தாலும், அவர் மக்கள் மன்றத்தில் மிகப்பெரும் செல்வாக்குடனேயே இறுதி வரை திகழ்ந்தார்!
அவரது மறைவுக்குப் பிறகு, சசிகலாவால் முதல்வர் அரியணையில் ‘உட்கார்த்தி’ வைக்கப்பட்ட எடப்பாடி உட்பட மற்ற அனைத்துத் தலைவர்களுக்கும் அந்தப் பதவிகளாலேயே மரியாதை கிடைத்தது!
இன்று, எம். ஜி ஆர். ஆரம்பித்து வைத்த அந்தக் கட்சிக்குத் தொண்டர்கள் மட்டுமே இருக்கிறார்கள்! ஆனால், செல்வாக்கு உள்ள தலைவர்கள் இல்லை!
2021 சட்டமன்றம், தற்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் அக்கட்சி பெற்றுள்ள படுதோல்வி யே இதற்குச் சான்றாகும்!
தற்போது, மீண்டும் ‘வெளிவந்திருக்கும்’ உ. பி. சகோதரி சசிகலா, ” கட்சியினர் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும்.. ” என்று அழைத்திருக்கிறார்!
தற்போது அ. தி. மு. க. இருக்கும் நிலையில், ‘அங்குள்ளோர் அனைவருமே ஜீரோ தான்…. ‘மதிப்பு வாய்ந்த அந்த ஒன்று’, மக்கள் கையில் தான் இருக்கிறது என்பதையும், ஆனால்… அந்த மதிப்பை அவர்களுக்குத் தருவதற்கு தற்போது மக்களுக்கு விருப்பம் இல்லை என்பதையும், இந்தக் ‘கார்ட்டூன்’ சொல்கிறது!
– ஓவியர் இரா. பாரி.