மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷியாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு மின்சாரமின்றி, 40லட்சம் மக்கள் அவதிப்படுவதாக உக்ரைன் அதிபர்  ஜெலன்ஸ்கி  தெரிவித்து உள்ளார். ரஷ்ய விமானத் தாக்குதல்கள் டஜன் கணக்கான இலக்குகளுக்குப் பிறகு உக்ரைன் ‘கடுமையான இழப்புகளை’ சந்தித்ததாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 6 மாதங்களை கடந்தும் தொடர்கிறது. சமீப காலமாக டிரோன் மூலம் தாக்குதலை முன்னெடுத்துள்ள ரஷியா, அங்குள்ள மின்உற்பத்தி நிறுவனங்களை குறிவைத்து தாக்குல் நடத்தி வருகிறது.  இதனால், பல மாகாணங்கள் மின்சாரமின்றி இருட்டில் மூழ்கி உள்ளது.

இதுகுறித்து கூறிய அதிபல் ஜெனஸ்கி, ரஷியா படையினர், மின்சார உள்கட்டமைப்பு மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர் என்றும், நாட்டின் பல நகரங்கள் மற்றும் பிராந்தியங்களில் மின்சார உள்கட்டமைப்பு மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால் அந்த பகுதிகளில் இருளில் மூழ்கி உள்ளதாகவும் அவர் கூறினார். இதனால் சுமார் 40லட்சம் மக்கள் இருளில் சிக்கி அவதிப்படுகின்றனர்.

ரஷ்ய விமானத் தாக்குதல்கள் டஜன் கணக்கான இலக்குகளுக்குப் பிறகு உக்ரைன் ‘கடுமையான இழப்புகளை’ சந்தித்ததாக ஜெலென்ஸ்கி கூறுகிறார் மின்தடைகளை சரி செய்ய கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி உக்ரைன் மக்களுக்கு உதவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் ஈரானில் தயாரிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை (டிரோன்கள்) உக்ரைன் படைகள் சுட்டு வீழ்த்தி யுள்ளதாக அந்நாட்டு விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஈரானில் தயாரிக்கப்பட்ட அந்த டிரோன்களை போரில் ரஷியா பயன்படுத்தி வருவதாகவும், உக்ரைனின் முக்கிய கட்டமைப்புகளை தாக்கி அழிப்பதற்கு இந்த ஆளில்லா விமானங்களை ரஷிய பயன்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.