ஜீ தமிழ்த் தொலைக்காட்சியில் தீபாவளி தினத்தன்று ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ மற்றும் ‘நான் சிரித்தால்’ ஆகிய திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன.

தற்போது ஜீ தமிழ்த் தொலைக்காட்சியில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜீ தமிழ் குடும்ப விருதுகள் 2020. திரைக்குப் பின்னால் இருக்கும் விஷயங்களை ‘குடும்பங்கள் கொண்டாடும் குடும்ப விருதுகள்’ என்கிற சிறப்பு நிகழ்ச்சி மூலம் அறிமுகம் செய்யவிருக்கின்றனர். காலை 9 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.

மதியம் 2 மணிக்கு ‘சிங்கிள்ஸ் – மிங்கிள்ஸ்’ என்கிற உற்சாகமான நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். இதில் ஜீ தமிழ் சேனலின் தொடர்களில் தோன்றும் சின்னத்திரை நடிகர்கள் தோன்றி ஒருவருடன் ஒருவர் போட்டி போட்டு விளையாடவுள்ளனர்.

காலை 11 மணிக்கு ஹிப் ஹாப் ஆதி, ஐஸ்வர்யா மேனன், கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான ‘நான் சிரித்தால்’ திரைப்படம் முதல் முறையாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகவுள்ளது.

அடுத்து மாலை 4 மணிக்கு, கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் ஆகியோர் நடித்த ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ முதல் முறையாக ஒளிபரப்பாகிறது.