புதுடெல்லி: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் யுவ்ராஜ் சிங், தன் பங்காக ரூ.50 லட்சம் வழங்கினார்.

இவர், பிரதமரின் கொரோனா தடுப்பு நிதியில் இத்தொகையை வழங்கியுள்ளார்.

பெரும் பணக்கார நாடுகள் உட்பட, உலகின் பல நாடுகளை கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால் ஏற்படும் பலி எண்ணிக்கை விரைவில் 1 லட்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்களைப் பொறுத்தவரை, சச்சின், ரெய்னா, கங்குலி, ரோகித் ஷர்மா, கோலி உள்ளிட்டோர் ஏற்கனவே நிதி வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், இந்திய முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனும், கடந்தாண்டு சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றவருமான யுவ்ராஜ் சிங் ரூ.50 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார்.