
ஊரடங்கு அமலில் இருப்பதால் பள்ளிவாசலுக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தவாறே ரமலான் நோன்பை கடைபிடித்து வருகின்றனர் இஸ்லாமியர்கள்.
ரமலான் மாதத்தை முன்னிட்டு இஸ்லாமியர்களின் இறுதித் தூதராம் முகம்மது நபி குறித்த 4 நிமிட பாடலைப் பாடி வெளியிட்டுள்ளார் யுவன் சங்கர் ராஜா.
யுவனின் இந்தப் பாடலுக்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், ‘யா நபி’பாடல் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு யூடியூப் ட்ரெண்டிங்கிலும் இடம்பிடித்துள்ளது.
இது குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், “யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து பாடிய “யா நபி” (Sal) புகழ்மாலையை கேட்டு மகிழுங்கள். பாடலை இயற்றி உடன் பாடியிருப்பவர் ரிஸ்வான்” என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
Patrikai.com official YouTube Channel