
யுவன் சங்கர் ராஜா, இந்திய இசை பிரபலங்களான பதா மற்றும் உஜானா அமித் ஆகியோருடன் டாப் டக்கர் ( Top Tucker) எனும் ஒரு சுயாதீன இசை பாடலில் இணைந்துள்ளார்.
இப்படாலுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, பதா மற்றும் உஜானா அமித் பாடலை பாடியுள்ளனர். இப்பாடலில் ராஷ்மிகா மந்தனாவும் நடித்துள்ளார்.
ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ள இப்பாடல் YouTube தளத்தில் வெளியான மிகக்குறுகிய நேரத்தில் 25 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
யுவன் சங்கர் ராஜாவின் திரை இசையல்லாத சுயாதீன இசை பயணம் ஜூலை 1999ல் “The Blast” ஆல்பத்தில் துவங்கியது.
தனது U1 Records இணையதளம் மூலம் பல சுயாதீன இசை முன்னெடுப்புகளையும், பல இசைத்திறமைகளையும் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறார் யுவன் சங்கர் ராஜா.
Patrikai.com official YouTube Channel