இசைஞானி இளையராஜாவின் மகனான யுவன் ஷங்கர் ராஜா பிஜிஎம் கிங்காக வலம் வருபவர். அண்மையில் இஸ்லாம் மதத்திற்கு மாறிய யுவன் அவ்வப்போது தன்னுடைய வலைத்தள பக்கத்தில் இஸ்லாம் சம்பந்தமான குர்ஆன் வாசகங்களை பகிர்வார்.
அந்த வகையில் நேற்று குரான் வசனம் ஒன்றை பதிவு செய்தார். இந்த வசனத்திற்கு ’நீங்கள் யுவன்சங்கர்ராஜாவாக பிறந்ததால் தான் உங்களை நாங்கள் பின் தொடர்கிறோம், மேலும் இது மதத்தை பரப்பும் தளம் இல்லை, இதே ரீதியில் நீங்கள் சென்றால் உங்கள் பக்கத்தில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்று பலரும் கூறியிருந்தார்.
அதற்கு ‘வெளியேறி விடுங்கள்’ என்ற ஒன்றை வரியில் பதில் அளித்துள்ளார் யுவன் சங்கர் ராஜா.
அதே போல் இன்னொரு நெட்டிசன், ‘இதே கருத்தை நீங்கள் பகவத் கீதை, பைபிளில் பார்க்கவில்லையா? என கேட்டுள்ளார் .