நாசிக்:

சென்னையில் 2015-ம் ஆண்டு நிகழ்ந்த கடும் வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய கெளசல் என்ற வாலிபர் தூக்கிட்டுக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் மழையும் அதைத்தொடர்ந்து வெள்ளமும் ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் பலியானார்கள். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர்.

இக்கட்டான சூழலில் இருந்த சென்னைவாசிகளை காப்பாற்ற ஏராளமான தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் முன்வந்தனர். இவர்களில் நாசிக்கை சேர்ந்த கெளசல்பாக் என்பவர் குறிப்பிடவேண்டியவர்.

உதவும் கைகள் என்ற பெயரிலான இவரது மொபைல் அப்ளிகேசன் வெள்ளத்தில் சிக்கிய 20 ஆயிரம் பேரை  காப்பாற்ற பெரிதும் உதவியது. இந்நிலையில் கெளசல் நேற்றுமதியம் நாசிக்கில் உள்ள அவரது இல்லத்தில்  தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், செளசலின் அறையில் இருந்த அவரது செல்போனில் வீடியோ பதிவு ஒன்றை கண்டுபிடித்தனர்.

அதில், தான் தற்கொலை  செய்து கொண்டதற்காக தனது பெற்றோரிடமும், நண்பர்களிடத்திலும்  மன்னிப்புக் கோரியுள்ளதாகவும், அதேநேரம்  எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்ற விபரத்தை அவர் குறிப்பிடவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

கெளசலின் உதவும் கைகள் மொபைல் அப்ளிகேசனை நாசிக் மற்றும் உஜ்ஜயினி கும்பமேளாக்களிலும் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.