ஆந்திராவில் பலம் வாய்ந்த தெலுங்கு தேசம் கட்சியை வீழ்த்தி, ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது.

ஆந்திர மாநிலத்திற்கு கடந்த மாதம் மக்களவை தேர்தலுடன், சட்டப்பேரவை தொகுதிகளுக்கான பொதுத்தேர்தலும் நடைபெற்றது. மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் நேருக்கு நேர் களம் கண்ட ஆளும் தெலுங்கு தேசம் கட்சியை 100க்கும் மேற்பட்ட இடங்களில் வீழ்த்தி பெரும்பான்மையை பெறும் நிலையில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் உள்ளது. கடந்த தேர்தலில் 102 தொகுதிகளில் வெற்றி கண்ட தெலுங்கு தேசம் கட்சி, இம்முறை 35 தொகுதிகளை கூட தாண்ட தடுமாறி வருகிறது.

மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் 88 தொகுதிகளில் வென்றால் ஆட்சியமைக்க முடியும் என்கிற சூழலில், மாலை 4.15 நிலவரப்படி,

ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ்: 148 தொகுதிகள்

தெலுங்கு தேசம்: 26 தொகுதிகள்

ஜனசேனா: 1 தொகுதி

இவ்வாறு முன்னிலை நிலவரங்கள் வெளியாகியுள்ளன.

பெரும்பான்மைக்கும் அதிகமான தொகுதிகளில் ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருவதால், ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராவது உறுதியாகியுள்ளது. இதற்கிடைய வரும் 30ம் தேதி ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.