சென்னை
சென்னை போக்குவரத்து காவல்துறை யூடியூபர் இர்ஃபானுக்கு ஹெல்மெட் இல்லாமல் நம்பர் பிளேட் இல்லாமல் பைக் ஓட்டியது உள்ளிட்ட குற்றங்களுக்கு ரூ. 1500 அபராதம் விதித்துள்ளது.
யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் பிரபல யூடியூபர் இர்பான் உணவகங்களில் உள்ள உணவுகளை ரிவியூ செய்வதன் மூலம் பிரபலமான இவர் திரைப்பிரபலங்களுடன் உணவருந்தியவாறே நேர்காணல்களும் எடுத்து வருகிறார். இர்பான் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அவ்வகையில், அண்மையில் ஹெல்மெட் அணியாமல் இர்பான் பைக் ஓட்டிய வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலானது.
சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு, நடிகர் பிரசாந்த் பேட்டியளித் போது‘யூ-டியூப்’பை சேர்ந்த நிகழ்ச்சி பெண் தொகுப்பாளர் பின்னால் அமர, பிரசாந்த் தனது மோட்டார் சைக்கிளில் சென்னை தியாகராயநகர் சவுத் போக் சாலையை சுற்றி சுற்றி வந்து பேட்டியளித்தார். இந்த பேட்டி, சம்பந்தப்பட்ட யூ-டியூப்பில் வெளியாகி வைரலானது. என்வே போக்குவரத்து போலீசார் நடிகர் பிரசாந்துக்கு ரூ.1,000, உடன் சென்ற பெண்ணுக்கு ரூ.1,000 என மொத்தம் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
நெட்டிசன்கள், “நடிகர் பிரசாந்த்தை விட சக்தி வாய்ந்தவர் யூடியூபே இர்பான் தான். இதுவே TTF வாசனா இருந்தா உடனடி கைது தான்” என்று விமர்சித்தனர். என்வே, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியது முறையான நம்பர் ப்ளேட் இல்லாதது உள்ளிட்டவைக்காக யூடியூபர் இர்ஃபானுக்கு ரூ.1,500 அபராதம் விதித்து சென்னை போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.