தூங்கினால் உயிர்போகும்!! விநோத நோயில் சிக்கிய வாலிபர்

லண்டன்:

இங்கிலாந்து நாட்டில் தூங்கினால் உயிரை பறிக்கும் வினோதமான நோயால் பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் தனது இறுதி நாட்களை எண்ணிக்கொண்டுள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள கோஸ்பார்ட் நகரில் வசித்து வருபவர் லியாம் டெர்பிஷைர் (17) . இந்த வாலிபரை வினோதமான ஒரு நோய் தாக்கியுள்ளது. வாலிபர் பிறந்த நாள் முதல் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி பெரும் சித்ரவதையை அனுபவித்து வருகிறார்.

குறிப்பாக, மத்திய ஹைப்போவென்டிலேஷன் சிண்ட்ரோம் எனும் விசித்திரமான நோய் இந்த வாலிபரை தாக்கியுள்ளது. உலக மக்கள் தொகையில் ஆயிரத்து 500 நபர்களை மட்டுமே தாக்கும் இந்த அரிதான நோயின் தன்மையால் வாலிபரின் பெற்றோர் ஒவ்வொரு நாளும் நரகத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்த நோய் தாக்கியுள்ள நபர் தூங்கினால் அவரது நுரையீரல் செயல்பாடு முற்றிலுமாக நின்றுவிடும் அபாயம் உள்ளது. இதுமட்டுமில்லாமல், இதயத்துடிப்பின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படுவதுடன் ரத்தக்கொதிப்பும் ஏற்படும் வாய்ப்புள்ளது.

வாலிபருக்கு சிகிச்சை அளித்துவரும் டாக்டர் கூறுகையில், ‘‘‘வாலிபரின் எதிர்காலம் நிச்சயத்தன்மை இல்லாதது. ஒவ்வொரு முறை வாலிபர் படுக்கைக்கு செல்லும்போது உயிரை பாதுகாக்க உதவும் கருவிகளை பொருத்திய பின்னர் தான் தூங்க முடியும்.
இச்சாதனங்கள் பொருத்தாமல் தூங்கினால், அதுவே கடைசி தூக்கமாகவும் இருக்க வாய்ப்புள்ளது’’ என்றார்.
English Summary
youth stuck in a different disease of slept death