தன்னையே கொல்ல கூலிப்படை… இன்சூரன்ஸ் பணத்துக்காக நடந்த பயங்கரம்…
டெல்லியில் ஆர்யா நகர் என்ற பகுதியில் மளிகைக் கடை நடத்தி வந்த கவுரவ் பஞ்சால் , கடன் தொல்லையால் அவஸ்தைப் பட்டார்.
கடனை தீர்க்க அவர், திடுக்கிடும் முடிவை மேற்கொண்டார்.
என்ன முடிவு?
10 லட்சம் ரூபாய்க்கு இன்சூரன்ஸ் பாலிசி எடுத்தார்.
பின்னர், அந்த பணம் தனது குடும்பத்தார் கையில் கிடைக்கும் வகையில், உயிரை மாய்த்துக் கொள்ளத் தீர்மானித்தார்.
3 இளைஞர்களை அணுகி, தன் திட்டத்தைக் கூறிய கவுரவ், தன்னைக் கொன்று தூக்கில் தொங்க விடுமாறு தெரிவித்துள்ளார்.
இதற்காக அவர்களுக்கு 60 ஆயிரம் ரூபாய் பணமும் கொடுத்துள்ளார்.
பணம் வாங்கிய மூவரும் கவுரவை கொன்று ஒரு மரத்தில் தொங்க விட்டுக் காட்சிப்படுத்தி இருந்தனர்.
மரத்தில் பிணமாகத் தொங்கிய கவுரவ் கைகள் கட்டப்பட்டிருந்ததால், இது கொலை என்ற முடிவுக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, கவுரவ் பணம் கொடுத்து கூலிக்கு ஆட்களை அமர்த்தி, தன்னை தானே கொலை செய்து கொண்ட பயங்கரம் தெரியவந்தது.
கவரவை கொன்று, மரத்தில் தொங்க விட்ட மூவரையும் போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனது குடும்பத்துக்கு இன்சூரன்ஸ் பணம் கிடைக்க , தனது உயிரையே இளைஞர் மாய்த்துக் கொண்ட சம்பவம் டெல்லியை அதிர வைத்துள்ளது. இதில் பிரச்சினை என்னவென்றால் பாலிசிதாரர் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தை ஏமாற்ற முயன்றதால் இப்போது இழப்பீடு பணம் கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளது..
— பா.பாரதி