சென்னை: செங்கல்பட்டு அருகே வசித்துவரும் விசிக எம்எல்ஏவான, செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபாவுக்குச் சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இளைஞர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வசுவசமுத்திரத்தை சேர்ந்த குணசேகரன் என்பவர், உறவினரின் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியை மிதித்ததில் குணசேகரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதியின் விசிக எம்எல்ஏ பனையூர் மு.பாபு. இவர் மீது கண்ணெல்லாம் புண்ணாகும் அளவுக்கு வருத்தப்பட்டுக் கிடக்கிறார்கள் வாக்களித்த மக்கள். நல்லது கெட்டதுக்குக்கூட தொகுதிப்பக்கம் வரமாட்டேங்கிறாரே என்பது இவர் மீது மக்களுக்கு இருக்கும் கடும் அதிருப்தி நிலவி வருகிறது.
இந்த நிலையில் பனையூர் பாபா தனக்கு சொந்தமான விவசாய நிலத்தை சுற்றி மின்வேலி அமைத்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த மின்வேலை இருப்பது தெரியாமல் அங்கு சென்ற இளைஞர் உயிரிழந்த நிலையில், இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில்தான், அந்த இடம், செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபாவுக்குச் சொந்தமானது என்பது தெரிய வந்தது.
விவசாய நிலத்தை காட்டுப்பன்றிகள் அழிப்பை தடுக்கும் வகையில், சட்டவிரோதமாக மின்வேலி அமைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. மின்வேலி அமைத்த எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆனால், காவல்துறையினர் இந்த மரணம் குறித்து இதுவரை வழக்கு பதிவு செய்யவ்ல்லை என்று கூறப்படுகிறது. சட்டவிரோத மின்வேலை அமைத்த எம்எல்ஏ மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.