கொல்கத்தா: குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் இளைஞர்கள் தவறாக வழி நடத்தப்படுகிறார்கள் என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார்.

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான இன்று தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி, கொல்கத்தா ஹவுரா நகரின் பேளூர் மடத்திற்கு சென்று சுவாமி விவேகானந்தர் மற்றும் அவரது குருவான ராமகிருஷ்ண பரமஹம்சரின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார்.

பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: குடியுரிமை திருத்த சட்டம் குறித்து நீங்கள் புரிந்து கொண்டதை அவர்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். இது பற்றி பலமுறை தெளிவான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.

குடியுரிமை திருத்த சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச மத சிறுபான்மையினர் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

சில அரசியல் கட்சிகள், வேண்டுமென்றே இதை புரிந்து கொள்ள மறுக்கின்றனர். அவர்கள் மக்களை குறிப்பாக இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றனர் என்று பேசினார்.