ஃப்ளாரிடா: இதே நிலை நீடித்தால், நான் வளர்ந்து பெரியவனான பின்னர், இந்த உலகம் இருக்குமா? என்பதே தெரியாது என 11 வயது அமெரிக்க சிறுவன் லெவி டிராஹிம் கூறியுள்ளான்.

பருவநிலை மாறுபாடு தொடர்பாக, அமெரிக்க அரசின் மீது வழக்குத் தொடர்ந்துள்ள வாதிகளில், மிகவும் இளைய வயதுள்ள வாதி இந்த சிறுவன்தான்.

Our Children’s Trust மற்றும் Earth Guardians ஆகிய அமைப்பினர், பருவநிலை மாறுபாடு தொடர்பாக, ‍அமெரிக்க அரசின் மேல் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்த 2 அமைப்புகளையும் சேர்ந்த மொத்தம் 21 வாதிகளில், அந்த சிறுவன்தான் மிகவும் இளையவன்.

இந்த சிறுவன் கூறியுள்ளதாவது, “நான் வளர்ந்து பெரியவனாகி, எனக்கு குழந்தைகள் பிறந்து, அவர்களால், நான் பிறந்து, வளர்ந்து, விளையாடிய இடத்தைப் பார்க்க முடியும் என உண்மையிலேயே நம்புகிறேன்.

ஆனால், யோசித்துப் பார்த்தால், உண்மையிலேயே நான் அவ்வளவு நாட்கள் இருப்பேனா? அல்லது நாம் அனைவரும் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்து கொண்டிருப்போமா? என்றே நினைக்கத் தோன்றுகிறது. நிலைமை அந்தளவிற்கு மோசமாக சென்று கொண்டுள்ளது” என கூறியுள்ளான் இந்த சிறுவன்.

மேற்கூறிய 2 அமைப்புகளும், பருவநிலை மாறுபாடு தொடர்பாக, அமெரிக்க அரசுக்கெதிராக தொடர்ந்த வழக்கு, பல்லாண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

– மதுரை மாயாண்டி