விருதுநகர்: விருதுநகர் பொருட்காட்சியில் உள்ள ராட்டினத்தில் ஏறி சுற்றி வந்த பெண், திடீரென ராட்டினத்தில் இருந்து கீழே விழுந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கீழே விழுந்ததால் பலத்த காயமடைந்த பெண் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

விருதுநகர் பொருட்காட்சியில் ராட்டினத்தில் இருந்து பெண் தவறி விழுந்த பதைபதைக்க வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் – மதுரை சாலையில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் 77-வது பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த பொருட்களை நாள்தோறும் ஏராளமானோர் கண்டு ரசித்து செல்கின்றனர்.
இந்த நிலையில், நேற்று இரவு, அங்கிருந்த ராட்டினத்தில் மக்கள் ஏறி சுற்றிக் கொண்டிருந்தனர். அப்போது கெளசல்யா என்ற இளம்பெண் ராட்டினத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில், காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வரும் நிலையில், ராட்டினத்தில் இருந்து பெண் கீழே விழுந்த வீடியோ வெளியாகியுள்ளது.