சென்னை,

ல்லிக்கட்டு போராட்ட இளைஞர்கள்,  போராட்ட களத்திலிருந்து இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் தமிழக பா.ஜ.க தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு இயற்றியுள்ள சட்டத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.

இந்நிலையில், தமிழக பா.ஜ. தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு போராட்டத்தை கைவிட வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மத்தியஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக என் தமிழ் சொந்தங்கள் போராட்டத்தை நிறைவு செய்ய வேண்டும் என்றும், தமிழினம் உள்ளவரை ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற சட்டரீதியான நடவடிக்கையை பிரதமர் எடுப்பார் எனவும், சரித்திர நிகழ்வுக்காக போராடிய மாணவர்கள், இளைஞர்களுக்கு நன்றி என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

போராட்டத்தில் உள்ள அனைவரும் உடனடியாக வாடிவாசல் நோக்கி பயணிக்க வேண்டும் எனவும் அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மாணவர்கள், இளைஞர்கள் 6-வது நாளாக போராடி வருகின்றனர். இதனை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அரசு அவசரச் சட்டத்தை இயற்றியுள்ளது. மத்திய, மாநில அரசு கொண்டு வந்த சட்டத்தை மதித்து இளைஞர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழிசை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் தமிழகம் போராட்ட களத்திலிருந்து இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் எனவும் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளா.

பா.ஜ.க. எம்.பி. தருண்விஜய்

ஜல்லிக்கட்டுக்காக அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக மக்களுக்கு தலை வணங்குகிறேன் என சென்னை விமான நிலையத்தில் பாஜக முன்னாள் எம்.பி. தருண்விஜய் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு காண மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றன என தருண்விஜய் கூறியுள்ளார்