மும்பை: கொரோனா ஊரடங்கால், லாரிகளில் பசியுடன் தங்களின் சொந்த ஊருக்குத் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகிறார் உள்ளூர் கிரிக்கெட் வீரர் சர்ஃபராஸ் கான்.
மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த இவர், ரஞ்சிப் போட்டி மற்றும் ஐபிஎல் போட்டிகளில் (பஞ்சாப் அணி) விளையாடி வருகிறார்.
வெறும் 22 வயதேயான இந்த கிரிக்கெட் வீரர், இவரது நண்பர்களுடன் சேர்ந்து சாலையோரம் நின்று, வாகனங்களில் பசியுடன் அடித்துப் பிடித்து செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு, வாகனங்களை நிறுத்தி, உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகிறார்.
இளம் வயதில், மிகவும் தேவையான ஒரு அத்தியாவசிய உதவியை, பாவப்பட்ட மக்களுக்கு இவர் செய்வதானது, பலரின் பாராட்டுகளைக் குவித்துள்ளது. இவர் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர், வலதுகை பேட்ஸ்மேன் மற்றும் பகுதிநேர சுழற்பந்து வீச்சாளர்.