புதுடெல்லி: 
பிரதமர் மோடியை வாரணாசி, அயோத்தியில் மட்டுமே பார்க்கலாம்.. நாடாளுமன்றத்தில் அல்ல என்று  காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
காசி விஸ்வநாத் தாம் வழித்தட திறப்பு விழாவுக்காக வாரணாசிக்குப் பிரதமர் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டிருப்பது குறித்து கருத்துக் கேட்டபோது, ​​முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் இதனைத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பிரதமருக்குப் பாராளுமன்றத்தின் மீது எவ்வளவு பெரிய மரியாதை உள்ளது, அவர் தியாகியான பாதுகாப்பு ஊழியர்களுக்கு டிசம்பர் 13 அஞ்சலி செலுத்துவதைத் தவிர்த்து விட்டு,  வாரணாசிக்குச் செல்வார். வாரணாசி மற்றும் அயோத்தி போன்ற இடங்களில் மட்டுமே நீங்கள் அவரைக் காண்பீர்கள், பாராளுமன்றத்தில் அல்ல என்று தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 13, 2001 அன்று பயங்கரவாத தாக்குதலிலிருந்து பாராளுமன்ற வளாகத்தைப் பாதுகாக்கும் போது தங்கள் இன்னுயிரை ஈட்டிய பாதுகாப்பு வீரர்களுக்குப் பாராளுமன்றம் செலுத்திய மரியாதை செலுத்தப்பட்டது.  தேசத்தின் சேவையில் உயிர்நீத்த பாதுகாப்புப் படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.