புதுடெல்லி: யூடியூப் சேனலில் ‘விருப்பமின்மை'(dislikes) மற்றும் எதிர்மறை கருத்துக்களை ஒரு கட்சி முடக்கலாம்; ஆனால் மக்களின் குரலை முடக்க முடியாது. மக்களின் குரலை உலகத்தின் முன்பாக கொண்டு செல்வதை நாங்கள் தொடர்வோம் என்று பேசி, பாரதீய ஜனதாவை பெயர் குறிப்பிடாமல் தாக்கியுள்ளார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.
பாரதீய ஜனதாக் கட்சியின் யூடியூப் சேனலில் மோடியின் வீடியோ தொடர்பாக பதிவாகும் விருப்பமின்மைகள் மற்றும் எதிர்மறை கருத்துக்களை முடக்குவதற்கு, அக்கட்சி சார்பில் முடிவெடுக்கப்பட்ட நிலையில், பெயர் குறிப்பிடாமல் இவ்வாறு சாடியுள்ளார் ராகுல் காந்தி.
பிரதமர் மோடியின் கடைசி ‘மான் கி பாத்’ உரை குறித்து, அக்கட்சியின் யூடியூப் சேனலில் எதிர்மறை கருத்துக்கள் பதிவாகின. மேலும், ‘நீட்’ மற்றும் ‘ஜேஇஇ’ தேர்வுகள் குறித்த மத்திய அரசின் முடிவுகளுக்கு எதிராக அமைந்த கருத்துக்களையும் சிலர் அதனுடன் இணைத்துவிட்டார்கள். இதனையடுத்தே அந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டின் நிலவும் கடும் வேலைவாய்ப்பின்மை பிரச்சினை குறித்தும், மத்திய அரசை சாடியுள்ளார் ராகுல் காந்தி.