டெல்லி: மருத்துவ படிப்பு நுழைவுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், தேர்வு எழுத விரும்பும் மாணவர்களை இன்று மாலை முதல் தேர்வு விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது.

நடப்பாண்டு கொரோனா தொற்று காரணமாக பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கான மதிப்பெண் விவரங்கள் இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வு நாடு முழுவதும்   வரும் செப்டம்பர் மாதம் 12ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது. அதற்கான விண்ணப்பம் இன்று மாலை  5 மணிக்கு தொடங்குகிறது.

இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, நீட் தேர்வுகள் நாடு முழுவதும் 3862  மையங்களில்  கொரோனா கட்டுப்பாட்டு விதிகளின் படி  தேர்வு நடைபெற உள்ளது.