சென்னை,

மிழக அரசு வழங்கும் அவ்வையார் விருதுக்கு தகுதியான பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.

‘சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாசாரம், பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில்  தொண்டாற்றும் பெண்களை கவுரவப்படுத்தும் வகையில் அவ்வையார் விருது வழங்கப்பட்டு வருகிறது.

தேர்வு செய்யப்படும் பெண்கள்   சர்வதேச மகளிர் தினத்தன்று அவர்களுக்கு, ‘அவ்வையார் விருது’ வழங்கப்படும். இந்த விருதுடன்  ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், 8 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம்,  சான்றிதழ்  மற்றும் பொன்னாடை ஆகியவை வழங்கப்படும்.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான அவ்வையார் விருது தொடர்பாக சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,
பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொண்டு மேன்மையாக பணிபுரிந்த தமிழ் நாட்டை பிறப்பிடமாக கொண்ட 18 வயதிற்கு மேற்பட்ட பெண்மணிக்கு அவ்வையார் விருது 08.03.2018 அன்று கொண்டாடப்படும் உலக மகளிர் தின விழாவில் வழங்கப்பட உள்ளது.

2018-ம் ஆண்டு அவ்வையார் விருது வழங்கும் பொருட்டு கருத்துருக்கள் அனுப்புவதற்கான விதிமுறைகள்:

1. தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவர், 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.

2. சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுவராக இருத்தல் வேண்டும்.

3. இணைப்பு படிவம் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டிருக்கவேணடும். (தமிழ் (வானவில் அவ்வையார்)–மற்றும் ஆங்கிலம்)

4. விண்ணப்பதாரர் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக சேவை புரிந்த விவரம் 1 பக்க அளவில் தமிழ் (வானவில் அவ்வையார்) மற்றும் ஆங்கிலத்தில் அனுப்ப வேண்டும்.

5. விண்ணப்பதாரரின் கருத்துரு-2,( (தமிழ்1 மற்றும் ஆங்கிலம்1) மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ.

6. மேற்குறிப்பிட்டுள்ள விதிமுறைகளின்படி உரியமுறையில் பெறப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

இவ்விருதுக்கு ரொக்கப்பரிசு, தங்க பதக்கம், தகுதியுரை மற்றும் சால்வை வழங்கப்படும். அவ்வையார் விருது தமிழக முதலமைச்சரால் வழங்கப்படும்.

சமூகநலனைச் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கையினை மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக மேற்கொண்டு மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றிவரும் பெண்மணிகள் 15.01.2018க்குள் விண்ணப்பத்தினை அளிக்கும் பொருட்டு கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

மாவட்ட சமூகநல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
சிங்காரவேலர் மாளிகை, 8-வது தளம்,
இராஜாஜி சாலை, சென்னை-1.