யோகிபாபு என்றால், அவரது காமெடி காட்சிகள் தான், மனதில் தோன்றும். ஆனால் ‘பொம்மைநாயகி’ என்ற படத்தில் அவர் சீரியஸ் வேடத்தில் நடிக்கிறார்.

‘டீன் ஏஜ்’ பெண்ணின் தந்தையாக வரும் யோகிபாபுவுக்கு ஜோடியாக சுபத்ரா நடிக்கிறார். இவர் வடசென்னையில் கிஷோர், மனைவியாக நடித்திருந்தார்.

இந்த படத்தை ‘கபாலி’ பட இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்க, அறிமுக இயக்குநர் ஷான் டைரக்டு செய்கிறார்.

மீனவ கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்தப்படத்தின் ஷுட்டிங் கடலூர் பக்கமுள்ள கிராமத்தில் நேற்று தொடங்கியது. 25 நாட்களில் , ஒரே மூச்சில் படப்பிடிப்பை முடிக்க திட்டம்.

இந்த படத்தில் டீ கடையில் சம்பளத்துக்கு வேலை பார்க்கும் சர்வராக நடிக்கிறார், யோகிபாபு.

– பா. பாரதி

[youtube-feed feed=1]