லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலத்தின் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் சாதிவாரி இடஒதுக்கீட்டு முறையை ரத்துசெய்வதாக அறிவித்துள்ளது யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதீய ஜனதா அரசாங்கம்.
உத்திரப்பிரதேச மாநில தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்(SC), பழங்குடியின வகுப்பினர்(ST) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(OBC) ஆகியோருக்கான இடஒதுக்கீட்டு நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது.
அம்மாநிலத்தை ஆட்சிசெய்த சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசு, இந்த இடஒதுக்கீட்டு முறையைக் கொண்டு வந்தது. தற்போது அத்தகைய நடைமுறையை ரத்துசெய்வதாக அறிவித்துள்ளது யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதீய ஜனதா அரசு.
மாநிலத்தின் முன்னேற்றத்தை உறுதிசெய்யும் வகையிலும், ஊழலை முடிவுக்கு கொண்டுவரும் வகையிலும் பல நடவடிக்கைகள் மாநில அரசின் சார்பில் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.