லகாபாத்

த்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை ஐஎஸ் தீவிரவாத தலைவர் பாக்தாதியுடன் ஒப்பிட்டு பாக்தீதி என குறிப்பிட்டுள்ளார்.

கொல்கத்தாவில் நேற்று முன் தினம் நடந்த அமித்ஷாவின் சாலைப்பேரணியில் கடும் வன்முறை வெடித்தது.   இதில் பாஜக தொண்டர்களும் திருணாமுல் காங்கிரஸ் தொண்டர்களும் கடுமையாக மோதிக் கொண்டனர்.   தனியார் மற்றும் பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப் பட்டன.  வங்க அறிஞரான ஈஸ்வர சந்திர வித்யாசாகர் சிலை சேதப்படுத்தப்பட்டது.

இது குறித்து உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் செய்தியாளர்களிடம், “நேற்று முன் தினம் ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் சிலை உடைக்கப்பட்டதற்கு மிகவும் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்.  அவர் இந்தியாவின் மைந்தர்களில் ஒருவர் ஆவார்.  மிகப்பெரிய சீர்திருத்த வாதியும் ஆவார்.  அவருடைய சிலையை உடைத்த திருணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பழியை பாஜக மீது போட்டு விட்டனர்.

மம்தா பானர்ஜி தமது கட்சியினர் செய்த வன்முறையை மறைக்க முயற்சி செய்து வருகிறார்.   பாஜகவை கண்டு அச்சமடைந்துள்ள மம்தா தீதி மேற்கு வங்கத்தில் நடக்கும் பேரணிகளை ரத்து செய்து மேடைகளை அடித்து நொறுக்கி தொழிலாளர்களை தாக்கி வருகிறார்.  ஐஎஸ் தலைவர் பாக்தாதியை போல் இவர் பாக்தீதி ஆவார்” என தெரிவித்துள்ளார்.

இதே கருத்தை அவர் தனது டிவிட்டரிலும் வெளியிட்டுள்ளார்.   தீதி என்றால் சகோதரி என பொருள் ஆகும்.   மம்தா பானர்ஜியை மேற்கு வங்க மக்கள் அன்புடன் மம்தா தீதி என அழைப்பது வழக்கமாகும்.   அதை ஒட்டி அவரை பாக்தீதி என தீவிரவாதியுடன் ஒப்பிட்டு யோகி அழைத்துள்ளது மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.