
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மேல்நாகரம்பேடு கிராமத்தில் இருக்கும் தமது சொந்த இடத்தில் நடிகர் யோகிபாபு, வராகி அம்மன் கோயிலை கட்டியுள்ளார். இக்கோயிலின் குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது.
விநாயகர் பூஜையுடன் தொடங்கியது யாக பூஜைகள். இதையடுத்து, புனித நீர் நிரப்பப்பட்ட கலசம் புறப்பாடு நடைபெற்றது.
அதன்பிறகு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
Patrikai.com official YouTube Channel