பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படத்தில் சூரி – யோகி பாபு நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு மே 8-ம் தேதி முதல் சென்னையில் தொடங்குகிறது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, இமான் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார்.
இப்படத்தின் நாயகியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா உள்ளிட்ட பலரும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தில் சூரி – யோகி பாபு நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.