யோத்தி

யோத்தி ராமர் கோவில் கட்ட ஒவ்வொரு குடும்பமும் ரூ11 நிதி உதவியும் ஒரு செங்கல்லும் வழங்க வேண்டும் என உ பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரிக்கை விடுத்துள்ளார்.

உச்சநீதிமன்றம் நூறாண்டுக் காலமாக நீடித்த அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி நிலவழக்கில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் எனத்  தீர்ப்பு வழங்கியது. அத்துடன் இஸ்லாமியர்களுக்கு அயோத்தி நகருக்குள் உரிய சரியான இடத்தில் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றத்தின் உத்தரவிடப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்களை  உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் ராமர் கோயில் கட்டுவதற்கான தடை நீங்கியதாகக் கூறப்படுகிறது.

ஒரு பொதுக்கூட்டத்தில் உபி யோகி ஆதித்யநாத், ” அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியை பா.ஜ.,வும், உ.பி., அரசும் அதிதீவிரமாக மேற்கொண்டு வருகின்றன  மிக விரைவில் ராமர் கோயில் கட்டும் பணி துவங்கப்படும். அதற்காக ஒவ்வொரு குடும்பத்தினரும் ரூ.11 மற்றும் செங்கற்களை அளிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.

அனைத்துச் சமூகத்தினரின் பங்களிப்பிலேயே ராம ராஜ்யம் இயங்குகிறது என்பதால் இந்த நிதி உதவியை நான் கோருகிறேன்.   ராம ராஜ்யத்தில் எந்த பாகுபாடும் இன்றி அனைத்து துறைகளிலும் வளர்ச்சி உண்டாகும்” எனத் தெரிவித்துள்ளார்.