லக்னோ: 

உ.பி.,யில் செல்பி எடுக்க முதல்வர் ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு தடை விதித்துள்ளது. இது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாரதியஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு உ.பி.யில் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், முதல்வர் வசிக்கும் பகுதிகளில், ‘செல்பி’ எடுக்க, மாநில அரசு தடை விதித்துள்ளது.

உ.பி முதல்வராக  பா.ஜ.,வைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் இருந்து வருகிறார். அவர் தலைமையிலான அரசு செல்பி எடுக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

அதில்,  மாநிலத்தில், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் வி.ஐ.பி.,க்களின் பாதுகாப்பு கருதி, அவர்கள் வசிக்கும் பகுதிகளில், பொதுமக்கள், ‘செல்பி’ எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

முதல்வரின் வீட்டிற்கு செல்லும் தெருமுனையில், இது குறித்த எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.

பாஜக அரசின் இந்த வினோத உத்தரவுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மாநில அரசின் இது போன்ற உத்தரவுக்கு, சமாஜ்வாதி தலைவர், அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர், மாயாவதி உள்ளிட்ட, முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும்  கண்டனம் தெரிவித்து உள்ளனர்.