லக்னோ:

த்தரபிரதேசமாநிலத்தில், பாரதியஜனதா தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார்.

இவர் தலைமையிலான அரசு பதவி ஏற்று ஓராண்டு நிறைவுபெற்றதை யொட்டி மாநில தலைநகர் லக்னோவில் சிறப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் யோகி,  ஊழலுக்கு எதிரான புதிய  இணையதளத்தை  தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாது, மாநிலத்தில் நடைபெறும் ஊழலுக்கு எதிராக இன்று புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில், மாநிலத்தில் நடைபெறும் ஊழல் தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்களை இந்த இணைய தளத்தில் பதிவு செய்தால், அதன் மீது அரசு விசாரித்து நடவடிக்கை எடுக்கும் என அவர் உறுதியளித்தார்.

மேலுரும், மாநிலத்தின் பல்வேறு துறைகளில்  4 லட்சம் பேருக்கு விரைவில்  வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் எனவும் யோகி ஆதித்யநாத் கூறினார்.

நாங்கள் பொறுப்பேற்றபோது மாநிலத்தின் காலியான கருவூலத்தை நாங்கள் பெற்றோம், ஒரு லட்சத்துக்கும் அதிகமான கிலோமீட்டர் தூரத்திலுள்ள சாலைகளை அரசு இலவசமாக வழங்கினோம், கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடன்களை வழங்கினோம்,” என்றார் அவர்.

தற்போதைய ஆட்சியில், விவசாயிகளுக்கு 80,000 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது என்ற யோகி, தற்போது திறந்தவெளி கழிப்பிடங்கள் அமைந்துள்ள 8 மாவட்டங்களில், கழிப்பறைகள் கட்டப்பட்டு வருவதாகவும், வரும் அக்டோபர் 2018ம் ஆண்டிற்குள் பெரும்பாலான மாவட்டங்கள் திறந்தவெளி கழிவுகள் இல்லாத மாவட்டமாக இருக்கும் என்றும் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில கவர்னர் ராம் நாயக் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.