ஹரித்துவார்:
யோகா குரு ராம்தேவ் நடத்தும் பதஞ்சலி நிறுவனத்துக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
யோகா குரு ராம்தேவ் நிறுவனமான பதஞ்சலி சார்பில் விற்பனை செய்யபப்படும் மஸ்டரட் ஆயில், உப்பு, அன்னாசி பழ ஜாம், பீசன், தேன் போன்றவை தங்களது சொந்த நிறுவனத்தில் தயார் செய்யப்படுவதாக விளம்பரம் செய்யப்பட்டது.
இந்த பொருட்களை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை தர ஆய்வு மேற்கொண்டது. ருத்ராபூர் ஆய்வகத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் தரக்குறைவான பொருட்கள் என தெரியவந்தது. இதையடுத்து கடந்த 2012ம் ஆண்டு ஹரித்துவார் நீதிமன்றத்தில் பதஞ்சலி நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி லலித் நாராயண் மிஷ்ரா.. பதஞ்சலி நிறுவனம் தவறாக வழிநடத்தும் வகையில் விளம்பரம் வெளியிட்ட குற்றத்திற்காக ரூ. 11 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும். ஒரு மாதத்துக்குள் அபராத தொகையை செலுத்த வேண்டும். மேலும், வெவ்வேறு இடங்களில் பொருட்களை தயார் செய்துவிட்டு, சொந்த நிறுவனத்தில் தயாரித்தாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது என உத்தரவிட்டார்.