விஜய் பிறந்த நாளுக்காக commondp என்று ஒன்றை ஏஆர் முருகதாஸ் தன் டிவிட்டர் பக்கத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்தார்.
நகரம் சூழ்ந்த இடத்தில் , கொடிமரம் ஏறுவது போல விளையாட்டு வீரர்கள் தூக்கி பிடிக்க , ஒற்றை கை தூக்கி விஜய் நிற்பது போல்,இருக்கும் அந்த போஸ்டரில் .
அந்த போஸ்டரின் கீழே தரணி ஆள வா தளபதி என எழுதப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் வேகமாக பரவியது . வைரலான இந்த போஸ்டரை கிளிண்டன் ரோச் என்பவர் தயாரித்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் இந்த போஸ்டர் காப்பி எனும் செய்தி பரவி வருகிறது. சைனாவின் கைப்பந்தாட்ட வீரர் yao ming ஐ வைத்து விளம்பர நிறுவனம் தயாரித்த போஸ்டர் ஒன்று தான் விஜய் போஸ்டராக காப்பியடிக்கப்பட்டுள்ளது. இப்போது அந்த ஒரிஜினல் போஸ்டர் இணையம் முழுதும் பரவி வருகிறது.
இதனால் விஜய் ரசிகர்களை ஏமாற்றத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.