லக்னோ
ஆபத்தான முறையில் சாகசம் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிடும் இளைஞரின் பைக்கை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
காவல்துறையினர் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவிலுள்ள கவுதம்பள்ளி காவல்துறை சரகத்துக்குட்பட்ட யூ டியூபர் ஒருவரின் பைக்கை அண்மையில் பறிமுதல் செய்தனர். அந்த யூ டியூபர் ஆபத்தான முறையில் சாலையில் பைக்கில் சாகசம் செய்து அதை மற்றொருவர் மூலம் வீடியோவில் படம்பிடித்துக் கொண்டிருந்தார். இதைச் சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டே கடந்து சென்றனர்.
இதையொட்டி கவுதம் பள்ளி போலீஸ் நிலைய ஆய்வாளர் சுதிர் குமார், அந்த இளைஞரின் பைக்கை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்துள்ளார்.
சுதிர் குமார் அந்த இளைஞரிடம்,
”உங்களைப் பற்றி உங்கள் பெற்றோர் வேண்டுமானால் கவலைப்படாமல் இருக்கலாம். ஆனால் காவல்துறை அதிகாரிகள் நாங்கள் கவலைப்பட்டே ஆகவேண்டும். சாலையில் பொதுமக்கள் பாதுகாப்பாகப் பயணம் செய்வதை நாங்கள் விரும்புகிறோம். எனவே சாகசத்தில் ஈடுபட்ட யூ டியூபரின் பைக் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது”
என்றார்.
அந்த இளைஞருக்கு காவல்துறை அதிகாரிகள் அறிவுரை கூறினர் இந்த இளைஞர் இன்ஸ்டாகிராமின் ரீல்ஸில் காணொளியைப் பதிவேற்றுவதற்காக பைக்கில் ஆபத்தான முறையில் சாகசத்தில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.