வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,02,38,232 ஆகி இதுவரை 5,04,078 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,63,117 பேர் அதிகரித்து மொத்தம் 1,02,38,232 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,454 அதிகரித்து மொத்தம் 5,04,078 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 55,49,958 பேர் குணம் அடைந்துள்ளனர்.  57,670  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40,535 பேர் அதிகரித்து மொத்தம் 26,37,072 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 285 அதிகரித்து மொத்தம் 1,28,437 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 10,93,456 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29,313  பேர் அதிகரித்து மொத்தம் 13,45,254 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 555 அதிகரித்து மொத்தம் 57,658  பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 7,33,848 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,791  பேர் அதிகரித்து மொத்தம் 6,34,437 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 104 அதிகரித்து மொத்தம் 9,073 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 3,99,087 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,820  பேர் அதிகரித்து மொத்தம் 5,49,197 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 384 அதிகரித்து மொத்தம் 16,487 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3,21,774 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரிட்டனில் நேற்று 901 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 3,11,151 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று 36 பேர் உயிர் இழந்து மொத்த எண்ணிக்கை 43,550 ஆக உள்ளது.